Skip to main content

பாரா ஒலிம்பிக்ஸ்: தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவத்தை இழந்த மாரியப்பன் தங்கவேலு!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

mariyappan thangavelu

 

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று (24.08.2021) தொடங்கவுள்ளன. இந்தப் பாரா ஒலிம்பிக்சின் தொடக்க விழாவில், கடந்தமுறை தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, தேசிய கொடியான மூவர்ண கோடியை ஏந்திச் செல்வதாக இருந்தது.

 

இந்தநிலையில், மாரியப்பன் தங்கவேலுவிற்கு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணியுடன் தொடர்பு (contact) ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறும் கிராமத்தில் நடைபெற்ற கரோனா பரிசோதனையில், மாரியப்பன் தங்கவேலுவிற்கு கரோனா இல்லை என தெரியவந்தாலும், அவரை ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க செய்ய வேண்டாம் என போட்டியை நடத்தும் குழு அறிவுறுத்தியுள்ளது.

 

இதனால் பாரா ஒலிம்பிக்சின் தொடக்க விழாவில் இந்தியாவின் மூவர்ண கொடியை ஏந்திச் செல்லும் கவுரவத்தை மாரியப்பன் தங்கவேலு இழந்துள்ளார். அவருக்குப் பதிலாக தேக் சந்த் என்பவர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லவுள்ளார்.