Published on 14/06/2019 | Edited on 14/06/2019
இங்கிலாந்தில் தொடங்கி நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷன் மனி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
![pakistan cricket board chief about bilateral series between india and pakistan](http://image.nakkheeran.in/cdn/farfuture/mHQiUR1vpSsZ_JjXya99l6by17CKwV54-W1hshGX70A/1560500049/sites/default/files/inline-images/kohli-dhonid.jpg)
அப்போது இந்தியா பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் இனி எப்போது நடக்கும் என கேள்வி கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலளித்த அவர், "எங்களுடன் கிரிக்கெட் விளையாடுங்கள் என இந்தியா உள்பட எந்த ஒரு நாட்டுடனும் கெஞ்சிக்கொண்டு இருக்க முடியாது. கண்ணியமான முறையில், இந்தியாவுடனான இரு தரப்பு கிரிக்கெட் உறவுகள் மீண்டும் நடைபெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என தெரிவித்தார். கடைசியாக இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய இருதரப்பு ஆட்டம் 2013 ஆம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.