Skip to main content

இனி 'நோ-பால்' வீசிவிட்டுத் தப்ப முடியாது....!

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

no ball

 

இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் போட்டி இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டியில் மூன்றாவது நடுவருக்கு 'நோ-பால்' கவனித்து முடிவு அளிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

எல்லைக்கோட்டை தாண்டி கால் வைத்து பந்து வீசும் போது அது நோ-பாலாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சில நேரங்களில் களத்தில் உள்ள நடுவர்களின் கவனக்குறைவால் இது கவனிக்கப்படாது. இதனால் பல வீரர்கள் ஆட்டமிழந்து உள்ளனர். சில போட்டிகளின் முடிவுகள் கூட இதனால் மாறியிருக்கின்றன. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு இந்தப் பொறுப்பு தற்போது மூன்றாவது நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சோதனை முறையாக தற்போது மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியானது வெற்றிகரமாக இருந்தால் இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் இது பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதற்கு முன்பு இதுபோல், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் சில முறை பயன்படுத்தி இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் சோதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.