Skip to main content

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்த இந்திய அணி!

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

india vs australia 2nd test match Melbourne

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தை இந்திய அணி நிறைவு செய்தது. 

 

மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா தொடக்கத்திலிருந்தே தடுமாறியது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இன்னொரு தொடக்க வீரர் மேத்வியூ வேட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர் ஸ்மித் ரன் கணக்கை தொடங்காமல் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

india vs australia 2nd test match Melbourne

இதன்பிறகு லபூஷனே மற்றும் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறிது நேரம் தாக்கு பிடித்தனர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலியா அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

 

அதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை எடுத்தது. மயங்க் அகர்வால் ஒரு ரன்னைக் கூட எடுக்காமல் டக் அவுட் ஆனார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை விட 159 ரன்கள் பின் தங்கியுள்ளது இந்திய அணி.