
ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் மெகா ஏலம், பெங்களூரில் நாளை நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 590 வீரர்கள் ஏலத்தில் விடப்பட இருக்கிறார்கள். இதில் 370 இந்தியர்களும், 220 வெளிநாட்வர்களும் அடங்குவர். ஏலத்தின் முடிவில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகப்பட்சம் 25 வீரர்களையும் அணியில் இணைத்திருக்க வேண்டும் என்பது விதியாகும்.
மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஐபிஎல் மெகா ஏலம், நாளை நண்பகல் 12 மணிக்கு தொடங்கவுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜியோ டிவி செயலி ஆகியவற்றில் இந்த மெகா ஏலத்தை நேரடியாக காணலாம். மெகா ஏலத்தின் முதல் நாளான நாளை 161 வீரர்கள் மட்டுமே ஏலம் விடப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் முதல் இரண்டு புதிய அணிகள் களம் இறங்குவதையொட்டி, இந்த மெகா ஏலத்தில் ’ரைட்-டு மேட்ச் கார்டு’ வாய்ப்பு இடம்பெறவில்லை. அதேநேரத்தில் எற்கனவே ஐபிஎல் போட்டிகளில் ஆடி வரும் 8 அணிகளும் மொத்தமாக 27 வீரர்களை தக்க வைத்துக்கொண்டுள்ளனர். புதிதாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் இரண்டு அணிகளும் தலா 3 வீரர்களை தக்க வைத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.