Skip to main content

குஜராத் வீரர்களின் சாதனைகள்; பல்தான்ஸை பந்தாடிய ஹர்திக் படை

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

Achievements of Gujarat players; Hardik force defeated Paltans

 

16 ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 233 ரன்களை குவித்தது. ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். அதிகபட்சமாக சுப்மன் கில் 60 பந்துகளில் 129 ரன்களைக் குவித்தார். அதில் 7 பவுண்டரிகள் 10 சிக்ஸர்கள் அடக்கம். சாய் சுதர்சன் 43 ரன்களையும் ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 28 ரன்களையும் அடித்தனர். 

 

234 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்து   62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களையும் திலக் வர்மா 43 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய குஜராத் அணியில் மோஹித் சர்மா 5 விக்கெட்களையும் முகம்மது ஷமி, ரஷித்கான் தலா 2 விக்கெட்களையும் ஜோஸ்வா லிட்டில் 1 விக்கெட்டையும் எடுத்தனர். இந்த போட்டியில் வென்றதன் மூலம் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

 

நேற்றைய போட்டியில் சுப்மன்கில் அடித்த சதத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு சீசனில் அதிகமுறை சதமடித்த வீரர்களின் பட்டியலில் சுப்மன்கில் இணைந்தார். விராட் கோலி, ஜாஸ் பட்லர் 4 சதங்களையும் சுப்மன் கில் 3 சதங்களையும் விளாசியுள்ளனர். ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலிலும் கில் இணைந்தார். முதலிடத்தில் 973 ரன்களுடன் விராட் கோலியும் இரண்டாவது இடத்தில் 863 ரன்களுடன் ஜாஸ் பட்லரும் உள்ளனர். கில் 851 ரன்களுடன் 3 ஆம் இடத்தில் உள்ளார். சென்னையுடன் நடக்கும் இறுதிப் போட்டியில் அதிக ரன்களை குவிக்கும் பட்சத்தில் அவர் ஜாஸ் பட்லரை முந்தும் வாய்ப்புள்ளது. ப்ளே ஆஃப் போட்டிகளில் சுப்மன் கில் அடித்த 129 ரன்களே அதிகபட்சமாகும். இதற்கு முன் முதலிடத்தில் 122 ரன்களை அடித்து சேவாக் முதலிடத்தில் இருந்தார். 

 

நேற்றைய போட்டியில் ஷமி 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஐபிஎல் போட்டிகளில் பவர்ப்ளேவில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஷமி முதலிடத்தில் உள்ளார். இதுவரை அவர் பவர்ப்ளேவில் 17 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 2020 ஆம் ஆண்டு 16 விக்கெட்களை வீழ்த்திய போல்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார். நேற்றைய போட்டியில் மோஹித் சர்மா 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் ப்ளே ஆஃப் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய வீரர் என்ற முறையில் அவர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். அவர் 10 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். முதலிடத்தில் ஆகாஷ் மேத்வால் உள்ளார். 5 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

 


 

Next Story

போராடித் தோற்ற மும்பை இந்தியன்ஸ்; முதல் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sun risers won the match ipl live score update mi vs srh

ஐபிஎல் 2024 இன் 8ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த ஹெட் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார். அபிஷேக் ஷர்மா ஹெட்டை மிஞ்சும் அளவுக்கு அதிரடியில் கலக்கி 7 சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிளாசனும் தன் பங்கிற்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன்  34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 28 பந்துகளில்  42 ரன்கள் எடுத்தார்.

இறுதியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்பு கெயில் 175 அடித்த  அந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 263 ரன்களே சாதனையாக இருந்து வந்தது. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தது.

அதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் சிறப்பான துவக்கம் தந்தனர். இஷான் 13 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 34 ரன்கள் எடுத்தார். ரோஹித் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த திலக் வர்மா மற்றும் நமன் திர் இணையும் அதிரடியைத் தொடர்ந்தது. இருவரும் இணைந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் பாண்டியாவுடன் டிம் டேவிட் இணைந்தார். கேப்டன் பாண்டியா முதலிரண்டு பந்துகளில் அதிரடி காட்டி பின்னர் ரன் எடுக்க திணறினார். ஆனால் டிம் டேவிட் ஓரளவு அதிரடி காட்டி 42 ரன்கள் எடுத்தார். முதல் முறையாக களமிறங்கிய ஷெபெர்டு 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களே மும்பை அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் சன் ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் மும்பை அடித்த 246 ரன்களும் சேர்த்து ஒரு டி20 இல் இரு அணிகளும் சேர்த்து அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Next Story

MI vs GT: சறுக்கிய ஹர்திக்; சாதித்த சுப்மன் கில்

Published on 24/03/2024 | Edited on 25/03/2024
MI vs GT ipl live score update gujarat titans wins

ஐ.பி.எல் 2024 இன் 5ஆவது ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்குடையே அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இரவு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு கில் மற்றும் சஹா களமிறங்கினர். அதிரடியாகத் தொடங்கிய சஹாவை, பும்ரா தனது முதல் ஓவரிலேயெ துல்லியமான யார்க்கர் மூலம் க்ளீன் போல்டாக்கி 19 ரன்களுக்கு வெளியேற்றினார். அடுத்து கேப்டன் கில்லுடன் தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் இணைந்தார். இந்த இணை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கில் 31 ரன்களில் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்மத்துல்லா 17 ரன்களில் வெளியேறினார். பிறகு வந்த மில்லர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசிக்கட்ட ஓவர்களில் ராகுல் டெவாட்டியாவின் அதிரடியான 22 ரன்கள் கைகொடுக்க குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 6 ரன்களும், ரசித் கான் 4 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். மும்பை அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், கோயெட்ஸி 2 விக்கெட்டுகளும், சாவ்லா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இஷான் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அடுத்து ரோஹித்துடன் நமன் திர் இணைந்தார். ஆரம்பம் முதலே அதிரட் காட்டிய நமன் திர் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித்துடன் இம்பாக்ட் பிளேயராக டிவால்டு ப்ரீவிஸ் களமிறங்கினார். இருவரும் இணைந்து குஜராத் பந்து வீச்சை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் விரட்டிய வண்ணம் இருந்தனர்.

தலைமை பொறுப்பின் பாரம் இல்லாததால் ரோஹித் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரை சதம் அடிப்பார் என மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரோஹித் 43 ரன்களில் சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ப்ரீவிஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மாவுடன் இணைந்த டிம் டேவிட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேவிட் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய திலக் வர்மா 25 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கோயெட்ஸி 1 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் 10 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

குஜராத் அணி தரப்பில் அஸ்மத்துல்லா, உமேஷ், ஜான்சன், மொஹித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலம் முதன் முறையாக கேப்டன் பொறுப்பேற்றுள்ள கில் வெற்றிகரமாக தனது கேப்டன்சியை துவக்கி உள்ளார். மும்பை அணிக்கு முதல் முறை கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சறுக்கியுள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 11 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோற்ற மோசமான வரலாற்றை 12ஆவது ஆண்டாக தொடர்கிறது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.