11வது சீசன் ஐ.பி.எல் போட்டி பிளே ஆஃப் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 50வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும்- கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தது
மும்பை அணி சார்பாக சூர்யா குமார் யாதவ், க்ருனால் பாண்டியா மற்றும் கிரண் பொல்லார்டு ஆகியோர் சிறப்பாக விளையாடினர் இருபது ஓவர்கள் முடிவில் மும்பை அணி 186- 8 விக்கெட்டுகளை இழந்தது.
பஞ்சாப் அணி சார்பாக ஆண்ட்ரூ டை நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின் இறங்கிய பஞ்சாப் அணியில் ராகுல் மற்றும் ஆரோன் பின்ச் சிறப்பாக ஆடினர் ராகுல் அறுபது பந்துகளில் 94 நான்கு ரன்கள் விளாசியும் பும்ரா மற்றும் மிச்செல் மெக்லினெகன் பந்து வீச்சால் 20 ஓவருக்கு 183ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்களை இழந்து மூன்று ரன்களில் மும்பை அணி வெற்றியடைந்தது.
இந்த போட்டி முடிந்த பின் ஒரு அழகான விஷயம் அரங்கேறியது. மும்பை அணியின் ஹர்திக் பாண்டியவும், பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுலும் இருவரும் அவரவர் அணியின் ஜெர்சியை கழட்டி மாற்றிப்போட்டுக்கொண்டனர். இந்த நிகழ்வு அனைவரையும் வியக்க வைத்தது மட்டுமல்லாமல் மகிழ்ச்சி அடையவும் செய்த்தது. இது குறித்து ராகுல் கூறியபோது " இது தற்செயலாக நடந்தது நாங்கள் இதற்கு முன்கூட்டிய திட்டமிடவில்லை. நானும் ஹர்திக் பாண்டியவும் நண்பர்கள் அதனால் ஜெர்சியை மாற்றிக்கொள்ள விரும்பினோம்" என்று கூறினார். தற்போது இவர்கள் ஜெர்சி மாற்றிக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.