Skip to main content

சேப்பாக்கத்தில் முதல் போட்டி; வென்றது ஆஸ்திரேலியா

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

 First match at Chepak; Australia won

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்திய நிலையில், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒன்றில் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

 

சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் . இருந்தனர். இந்நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சென்னையில் ரசிகர்கள் குவிந்து இந்தியா வெற்றிபெற வேண்டும் எனக் கொண்டாடியதோடு, ஆரவாரம் சூழ டிக்கெட்டுகளை எடுத்து போட்டியை கண்டு ரசித்தனர். இந்தநிலையில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தியுள்ளது.

 

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இந்திய அணி 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே வெளியேறினார் சூர்யகுமார் யாதவ். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதேபோல் அக்சர் பட்டேல், சிராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். விராட் கோலி 54 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 40 ரன்களும், சுப்மன் கில் 37 ரன்களும், ரோகித் சர்மா 30 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில், ஆடம் சம்பா 4 விக்கெட்டுகளையும், ஆஷடன் அகர் 2 விக்கெட் களையும் வீழ்த்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்