Skip to main content

பாகிஸ்தான் கேப்டனை மன்னிக்கிறோம்; தெ.ஆப்ரிக்க கேப்டன் நெகிழ்ச்சி பேட்டி...

Published on 25/01/2019 | Edited on 25/01/2019

 

dtyhdhty

 

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த வாரம் சர்ச்சையில் சிக்கியது. டர்பனில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியின் போது, , பேட்டிங் செய்துகொண்டிருந்த தென் ஆப்பிரிக்க வீரர் பெகுல்க்வாயோவை பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமத் கருப்பர் என கூறி கிண்டல் செய்தார். 'ஏய் கருப்புப் பயலே, உன் அம்மா எங்கே? உனக்காக என்ன பிரார்த்தனைச் செய்ய சொன்னாய்' என சர்பராஸ் அகமத் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி சர்ச்சையானது. இதன் காரணமாக சர்பராஸ் மீது கண்டனங்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து சர்பராஸ் தனது ட்விட்டர் பதிவு மூலம் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். தற்போது இதுகுறித்து பேசியுள்ள தென் ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளேஸிஸ், 'நானும், எங்கள் அணியும் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுவை மன்னிக்கிறோம். ஏனென்றால், அவர் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுவிட்டார். அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுவிட்டார். நாங்கள் மன்னித்துவிட்டோம், இனிமேல் எங்கள் கையில் ஏதும் இல்லை. இனி ஐசிசி தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும். தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் வீரர்கள் மிகவும் கவனமாகப் பேசுங்கள். தயவு செய்து ஸ்லெட்ஜிங் செய்யும் போது வீரர்களை நிறவெறியுடன் இப்படி தாக்கி பேசாதீர்கள்' என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தெ.ஆப்பிரிக்காவின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.