16வது ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றது. இந்த ஐ.பி.எல். தொடரில் 10 அணிகள் மோதுகின்றன.
தற்போது வரை நடந்துள்ள ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லக்னோ அணி 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், அதே 11 புள்ளிகளுடன் சென்னை அணி மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. நேற்று லக்னோ - சென்னை அணிகளுக்கான ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜான்டி ரோட்ஸ், தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் ஐ,.பி.எல். தொடரில் லக்னோ அணிக்கான பயிற்சியாளராக உள்ளார். நேற்றைய சென்னை - லக்னோ அணிகளுக்கான ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது.
அப்போது மைதானத்தில் நீர் தேங்காமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மைதானத்தை மூடும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கிரிக்கெட் மைதான ஊழியர்கள் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இதனைக் கவனித்த ஜான்டி ரோட்ஸ் ஊழியர்களுக்கு உதவும் வகையில் தார்ப்பாயை மைதானத்திற்குள் ஊழியர்களுடன் சேர்த்து இழுத்து வந்தார். தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.