Skip to main content

"பால் அசைவமா? இஞ்சி, பூண்டு, வெங்காயத்தில் இவ்வளவு பயன்களா?" - விவரிக்கிறார் மருத்துவர் சி.கே. நந்தகோபாலன்

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

"Is milk non-vegetarian? Is ginger, garlic, and onion so useful?"- Dr. CK Nandagopalan explains!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் சி.கே. நந்தகோபாலன் சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழ் பாரம்பரிய மருத்துவத்திலும், தமிழ் விஞ்ஞானத்திலும் கந்தகத்தைப் பற்றிய அதிகமான தகவல்கள் உள்ளது. கந்தகம் என்பது மிக முக்கியமான ஒரு பொருள். உடலுக்குள் இருக்கும் 10 லட்சம் கோடி அணுக்களில் ஒவ்வொரு அணுவிலும் கந்தகம் உள்ளது. கந்தகம் என்பது சல்பர் ஆகும். இஞ்சி, பூண்டு, வெங்காயம், முட்டை, ப்ரோக்கோலி ஆகியவற்றில் கந்தகம் அதிகமாக இருக்கிறது. இதை சிறிய அளவுக்கு நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

 

அதில் இருந்து நமது உடலுக்குள் வரும் கந்தகத்தை, நமது உடல் ஏற்றுக் கொள்ளும். கந்தகம் என்பதை உணவின் வழியாக நமது உடல் பெற்றுக் கொள்வதுதான் சிறந்தது. புற்றுநோய் என்பது ஒரு ஃபங்கஸ் தான். இதை உணவு மூலம் எளிதாக குணப்படுத்த முடியும். எப்படி என்றால், தரைக்கு கீழ் வளரக்கூடிய எதையும் சாப்பிடக்கூடாது. கிழங்கு, வேர்க்கடலை உள்ளிட்ட மண்ணுக்கு அடியில் வளரக்கூடிய அனைத்தையும் சாப்பிடக்கூடாது. எனினும், இதில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

 

அத்துடன், மண்ணுக்கு மேல் வளரும் எல்லாவற்றையும் சாப்பிடலாம். முட்டை மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடலாம்; பால் உணவு சேர்க்கக்கூடாது. இன்று அசைவ உணவு என்று சொல்லப்படும் உணவுகளில் அதிகபட்ச அசைவ உணவு பால். மாடு தனது கன்றுக்கு கொடுக்கத் தயாரிக்கும் பாலைதான் நாம் எடுத்துக் கொள்கிறோம். மாட்டுக்கறி சாப்பிட்டாலும், மாட்டுப் பால் குடிச்சாலும் இரண்டும் ஒன்றுதான்.

 

தமிழ் பாரம்பரியத்தில் இருக்கும் கந்தகம் பற்றிய உணவை சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்கள். இஞ்சி பூண்டு, வெங்காயம் சாப்பிட்டால் கூட போதும். கந்தகம் நமது உடலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. நமது உடல் சீராக இயங்க வேண்டும் என்றால், அதற்கு ஆதாரமாக அமைவது இந்த கந்தகம் மட்டுமே. சின்ன வெங்காயம் வீரியமானது" என்றும் தெரிவித்துள்ளார்.