Skip to main content

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொடுக்கும் கொய்யாவின் பயன்கள்!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020


பழ வகைகளில் கொய்யாப்பழம் மனிதனின் ஆற்றல் மிகு செயல்பாடுகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் பழங்களில் ஒன்று. உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கும் பழங்களில் கொய்யா முக்கியமானது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் உடலில் மேற்புற பகுதிகளில் உள்ள தோலை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும். வைட்டமின் சி சத்து மற்ற எந்த பழங்களை காட்டிலும் கொய்யாவில் அதிகம் இருக்கின்றது. ஆரஞ்சு பழங்களில் இருக்கும் வைட்டமின் சி சத்துகளை விட நான்கு மடங்கு சத்து கொய்யாவில் இருக்கின்றது. இதன் காரணமாக நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து நோய் தாக்குதலில் இருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.
 

gh




கொய்யாப்பழம் சைாப்பிடுவதால் புரோட்டஸ்ட் என்ற வகையான புற்று நோய் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் தெரிவிக்கிறார்கள். கொய்யாவில் உள்ள அதிகப்படியான நார்சத்து காரணமாக சக்கரையின் அளவு திடீரென அதிகப்படியான உயரும் தன்மை கட்டுக்குள் வருகின்றது. லைக்கோபீன்கள் கொய்யாப்பழங்களில் நிறைந்துள்ளதால், மார்பகப் புற்று நோய்களை உருவாக்கும் செல்களை அழிக்கின்றது. இத்தகைய நன்மைகளை தரும் கொய்யாப்பழங்களை தினம் ஒன்று திண்போம், நோய்களை விரட்டுவோம்.