'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் சி.கே. நந்தகோபாலன் சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், ஃபேட் ஆகிய மூன்று சத்துகளும் நமது உடலுக்கு வேண்டும். இதில், முக்கியமாக நமது உடலுக்கு தேவைப்படுவது கார்போ ஹைட்ரேட். தென்னிந்தியாவில் சாப்பிடக் கூடிய உணவு தான், உலகத்திலேயே மிக உயரிய உணவு. உலகத்திலேயே நம்பர் 1 உணவு என்றால் அது இட்லி மட்டுமே. இதைத் தாண்டி உணவே கிடையாது.
தலைசிறந்த உணவு இட்லி. மிகச் சிறந்த உணவு நெய். அதில், உடலுக்கு தேவைப்படும் கொழுப்பு சத்து நெய்யில் உள்ளது. பசு நெய் பிரதானமானது. எருமை நெய்யையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த காலத்தில் சமுதாய நெறிமுறை, சமுதாய மாண்பு ஆகியவை இருந்தது. உணவை வாழ்த்தி வணங்குகிறோம்; பிறகு அதை உட்கொள்கிறோம். உயர் வெப்பநிலையில் உணவை சமைப்பது தவறு.
போகர் செய்த நவபாஷாண சிலைக்கு 'ஹார்ட் பீட்' உள்ளது. அந்த சிலைக்கு வேர்க்கும். பிரம்மத்துவம் என்பது படைப்பு; அதை தான் இயற்கை செய்தது. அந்த பிரம்ம ஞானத்தைப் பெறுபவன் ஞானி. ஆண், பெண்ணுக்கு காது குத்துவது காமத்தைக் குறைப்பதற்காக அல்ல; நெறிமுறையான காமத்திற்காக. ஆண்களுக்கு முக்கியமாக காது குத்த வேண்டும். இதற்கு பின்னால் அதிகமான அறிவியல் உள்ளது.
நெருப்பு மஞ்சள் நிறத்தில் தான் எரிய வேண்டும். நீல நிறத்தில் அல்ல. வேப்ப மர விறகு வைத்து சமைத்தால் உணவே மருந்து. எல்லா தோல் வியாதிகளும் குணமாகிவிடும். கையில் தான் சாப்பிட வேண்டும். ஸ்பூனில் சாப்பிடக் கூடாது" எனத் தெரிவித்தார்.