யூ-டியூப் வீடியோவுக்காக ஒருவருக்கு கிரீம் பிஸ்கட் என்று கூறி பற்பசையை வைத்து கொடுத்து ஏமாற்றியதற்காக ஸ்பெயின் நாட்டின் யூ-டியூப் பிரபலமான காங்குவா ரென் என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
![youtuber sentenced for 15 months in spain for a prank show](http://image.nakkheeran.in/cdn/farfuture/ViTpsUnlfnef87He3oWoCAGXmnUQmfzO4-17lR7QoCI/1559719570/sites/default/files/inline-images/hgafsdx.jpg)
21 வயதான காங்குவா ரென் 1.2 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கொண்ட யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பிராங்க் ஷோ எடுப்பதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு வீடில்லாமல் சாலையோரத்தில் வசிக்கும் ஒருவருக்கு பசிக்கு உணவு கொடுப்பதாக கூறி கிரீம் பிஸ்கட்டில் கிரீமுக்கு பதிலாக பற்பசையை வைத்து கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலாக நிலையில் வீடற்ற நிலையில், வாழ்வதற்கே கஷ்டப்படும் ஒருவரிடம் இவ்வாறு உணவை வைத்து பிராங்க் செய்தது தவறு என கண்டன குரல்கள் எழுந்தன. இதனையடுத்து இதற்காக அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள அந்நாட்டு நீதிமன்றம், காங்குவா ரென்னுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட நபருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,50,000 பணமும் வழங்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.