2018-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வாட்ஸ் ஆப் நிறுவனம், குரூப் வீடியோ கால் செய்துகொள்ளும் வசதியை அறிமுகம் செய்தது. அதன்பின் புதிய குரூப்பில் இணைவதற்கும் அதில் அட்மின் ஆகுவதற்கும் புதிய அப்டேட்டை அந்நிறுவனம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் தற்போது புதிதாக வாட்ஸ்அப் குரூப்களில் அனுப்படும் மெசெஜ்களில் குறிப்பட்ட நபரின் மெசேஜை விரைவில் தேடும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. வாட்ஸ்-அப் உள்ள குரூப்களில் அதன் பயன்பாட்டாளர்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன.
அதில் குறிப்பிட்ட நபர் அனுப்பிய மெசேஜை விரைவாகவும், எளிமையாகவும் தேடி எடுப்பதற்காக ‘அட்வான்ஸ் சர்ஜ்’ என்ற தேடல் அப்டேட் ஒன்றை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது இந்த வசதி பீட்டா பயன்பாட்டளர்களின் சோதனையில் உள்ளது எனவும், இன்னும் சில வாரங்களில் இது பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.