Skip to main content

சார்ஸை விட கரோனாவில் உயிரிழப்பு அதிகம்!

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சார்ஸ் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தாண்டியது.


சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பெரும்பாலானவை சீனாவுடனான போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ளன. உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை அறிவித்துள்ள சூழலில், வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

china country coronavirus infection peoples and world health organization

கடந்த 2003- ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய சார்ஸ் தொற்று வைரஸ் 26 நாடுகளுக்கு பரவியதில் சுமார் 774 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சீன நாட்டில் தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 810 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இதனால் சார்ஸ் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். 
 

மேலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் 2,649 பேர் நலமடைந்துவிட்டனர். அதேபோல் 33,738 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்