இந்தோனேஷியாவில் அதிகரித்து வரும் சுற்றுசூழல் மாசுபாட்டை விளக்கு விதமாக ஸ்பைடர் மேன் வேடத்தில் குப்பைகளை அகற்றியவருக்கு இணையதளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றது. அந்நாட்டில் வருடத்திற்கு 3.2 டன் குப்பை கொட்டப்படுவதாக சில நாட்கள் முன்பு வெளியாக ஆய்வு முடிவு தெரிவித்திருந்தது. மேலும் இந்த குப்பைகள் எல்லாம் கடலில் கொண்டப்படுவதால் பெரும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுவதாக அந்நாட்டில் உள்ள சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்திருந்தார்கள். மேலும் இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் அந்நாட்டில் உள்ள பாரிபாரி கடற்கரையை ரூடி ஹார்டோனோ என்பர் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்து சுத்தம் செய்து வருகிறார். அவருக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகின்றது. மேலும் சாதாரண உடையில் குப்பை அள்ளிய போது இப்பணியில் தனக்கு உதவ யாரும் முன் வரவில்லை என்றும், ஸ்பைடர் மேன் உடையணிந்து இந்த பணியில் ஈடுபட்ட நாள் முதல் அனைவரும் உதவி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.