இந்தியா உட்பட மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள் மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக உலக வளங்களுக்கான ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பு தனது அறிக்கையில், கடும் தண்ணீர் பஞ்சம் நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 13வது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள நாடுகளில் வரும் ஆண்டுகளில் மிக மோசமான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும் எச்சரித்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த பட்டியலில் கத்தார் நாடு முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் இஸ்ரேல், லெபனான், ஈரான், ஜோர்டான், லிபியா, குவைத், சவுதி அரேபியா, எரிட்ரியா, யுஏஇ, சான் மரினோ, பஹ்ரைன், இந்தியா, பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஓமான் மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகள் உள்ளன.
ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் போன்ற நகரங்கள், ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் Day zero வை அடைந்தது. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள நாடுகளும் எதிர்காலத்தில் Day zero வை அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.