Skip to main content

தக்காளி கிலோ 250 ரூபாய், பச்சை மிளகாய் கிலோ 160 ரூபாய்; மத்திய அரசின் நடவடிக்கையால் பாகிஸ்தானில் ஏற்பட்ட விலை உயர்வு...

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 

fdgfgfgdfg

 

இந்நிலையில் நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதுபோல ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் போர் பதட்டமும் அதிகரித்தது. அதனை தொடர்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீர் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்தும் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இதனை தொடர்ந்து உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்டு வந்த தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பாகிஸ்தானுக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு காய்கறிக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

தினமும் 80 முதல் 100 லாரிகள் வரை பாகிஸ்தானுக்கு காய்கறிகள் ஏற்றி சென்று வந்தன. இந்நிலையில் திடீரென இது நிறுத்தப்பட்டதால் அங்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக காய்களின் விலை வரலாறு காணாத வகையில் இமாலய உயரத்தை தொட்டுள்ளன.

அதன்படி பாகிஸ்தான் நாட்டில் தக்காளி கிலோ ரூ. 250-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ. 160-க்கும், சிவப்பு மிளகாய் ரூ. 300-க்கும், இஞ்சி ரூ. 150-க்கும், உருளைக்கிழங்கு ரூ. 70-க்கும், வெங்காயம் ரூ. 90-க்கும், கத்தரிக்காய், வெண்டைக்காய் தலா ரூ. 110-க்கும் விற்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்