நவம்பர் 3- ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிபர் வேட்பாளர்கள் பரபரப்பான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடென் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பிடெனின் இறுதிக்கட்ட விவாதம் நடைபெற்றது.
ஜோ பிடென் : கரோனாவை எதிர்த்துப் போராட ட்ரம்பிடம் எந்தத் திட்டமும் இல்லை.
டொனால்ட் ட்ரம்ப் : கரோனாவுடன் வாழ மக்கள் கற்றுக் கொண்டனர்; அமெரிக்காவில் கரோனாவால் இறப்போர் விகிதம் குறைந்துள்ளது.
ஜோ பிடென் : அமெரிக்காவில் வரும் மாதங்களில் மேலும் 2 லட்சம் பேர் கரோனாவால் இறப்பார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் : கரோனாவில் இருந்து 99% இளைஞர்கள் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவுக்கு கரோனா பரவ நான் காரணமில்லை; தவறு செய்தது சீனாதான்; இந்தாண்டு இறுதிக்குள் கரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும்.
ஜோ பிடென் : சீனாவில் டொனால்ட் ட்ரம்புக்கு ரகசிய வங்கிக் கணக்குகள் இருப்பதாக குற்றம்சாட்டினார்.
டொனால்ட் ட்ரம்ப்: சீனா, ரஷ்யா, உக்ரைனிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை.
ஜோ பிடென் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய வரியையே கட்டவில்லை.
டொனால்ட் ட்ரம்ப்: கோடிக்கணக்கில் முன்கூட்டியே வரி செலுத்தி விட்டேன். பிடென் குடும்பம் தவறான வழிகளில் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. எனது வங்கிக் கணக்குகள் அனைத்தும் வெளிப்படையானவை.
ஜோ பிடென் : தவறான வழிகளில் ட்ரம்ப் குடும்பம் சம்பாதித்துள்ளது; ட்ரம்ப் சீனா உதவியுடன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்க தேர்தலில் குறுக்கிட வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப்: வட கொரியாவுடன் நல்ல உறவை விரும்புகிறோம். வட கொரியா விவகாரத்தில் ஒபாமா செய்ய முடியாததை நாங்கள் செய்தோம்; வட கொரியா விவகாரத்தை ட்ரம்ப் ஒபாமா சிக்கலாக்கி வைத்திருந்தார்.
ஜோ பிடென் : வட கொரிய அதிபர் கிம் நல்ல மனிதர் என ட்ரம்ப் கூறியிருந்தார்; ஒபாமா கேர் காப்பீட்டுத் திட்டம் சிறப்பானது. தனியார் நிறுவன காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்குவேன். அதிபர் ட்ரம்பால், அமெரிக்காவில் ஒரு கோடி பேர் காப்பீட்டை இழந்து விட்டனர்.
டொனால்ட் ட்ரம்ப் : சீனா, ரஷ்யாவை போல் இந்தியாவிலும் காற்று மாசடைந்து உள்ளதாக குற்றம்சாட்டினார்.
டொனால்ட் ட்ரம்ப் : வேலை வாய்ப்பு திட்டங்களுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி அனுமதியளிக்கவில்லை.