Skip to main content

இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் அமெரிக்கா? - தவிர்க்கக் கோரும் செனட்டர்கள்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

modi - biden

 

இந்தியா கடந்த 2018 ஆம் ஆண்டு, ஐந்து வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ரஷ்யாவோடு 5.5 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்து கொண்டது. மேலும் இந்தியா, இந்த வான்வெளி பாதுகாப்பு மண்டலங்களை வாங்க முன்பணமும் செலுத்தியுள்ளது.

 

ஆனால் இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே விரிசல் ஏற்படவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா ஏற்றிய சட்டப்படி, ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும்.

 

இதனால் இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜான் கார்னி மற்றும் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் மார்க் வார்னர் ஆகியோர், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்தால் அது இரு நாடுகளிடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பை ஆபத்தில் ஆழ்த்தும் என்பதால், தேசிய பாதுகாப்பு மற்றும் பரந்த ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா மீதான பொருளாதாரத் தடையைத் தவிர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கடந்த வருடம் ரஷ்யாவிடமிருந்து இதே வான்வெளி பாதுகாப்பு மண்டலங்களை வாங்கியதற்காக, துருக்கி மீது அமெரிக்கப் பொருளாதாரத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்