ஐக்கிய அரபு அமீரகத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ள புதிய விதிமுறையால் இந்தியாவிலிருந்து சென்று அங்கு பணியாற்றும் செவிலியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட செவிலியர்களின் குறைந்தபட்சம் நர்ஸிங்கில் பட்டப்படிப்பு முடித்திருத்தல் வேண்டும் என அரபு அமீரகக் அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து அங்கு சென்று பணியாற்றும் இந்திய செவிலியர்கள் ஏராளமானனோர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலையிழந்துவிட்ட நிலையில் வேறு வழியில்லாமல் பலர் மீண்டும் தாயகம் திரும்பி வருகின்றனர்.
பட்டப்படிப்பு முடிக்காமல் பட்டயப்படிப்பு மட்டுமே முடித்து பணியாற்றி வரும் செவிலியர்கள் 2020-ம் ஆண்டுக்குள் அந்நாட்டு கல்வி அமைச்சகம் அங்கீகரித்த ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி நர்ஸிங் படித்து முடித்தால் அவர்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் பணியாற்றுவதில் அதிக அளவிலான செவிலியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களே ஆவர்.
இந்த நிலையில் அமீரகத்தின் புதிய விதிப்படி இந்தியாவில் கேரளாவில் பட்டப்படிப்பு படித்தால் மட்டுமே அங்கீகரிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. ஏனென்றால், ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய கல்வித்துறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நர்ஸிங் கவுன்சில் கேரள நர்ஸிங் கவுன்சில் மட்டுமே ஆகும். இதனால் குழப்பமடைந்துள்ள பல இந்திய செவிலியர்கள் மீண்டும் இந்த திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.