Published on 18/10/2018 | Edited on 18/10/2018
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அக்டோபர் 16ஆம் தேதி தந்து ட்விட்டர் பக்கத்தில், “ சட்டத்திற்குபுறமாக யாரேனும் அமெரிக்கா எல்லைக்குள் நுழைந்தாள், அவர்கள் கைது செய்யப்பட்டு தங்களது நாட்டிற்கே நாடு கடத்தப்படுவார்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து போட்ட மற்றொரு பதிவில்,” ஹோண்டுரஸ், கவுதமேலா, எல் சால்வடார் போன்ற நாட்டு மக்களை அமெரிக்காவுக்குள் நுழையாமல் இருக்க அந்நாட்டு எல்லைகளை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைமீறியும் உங்கள் நாட்டு மக்கள் வந்தால், உங்களுக்கு அளிக்கப்படும் நிதி ரத்து செய்யப்படும்” என்று எச்சரித்துள்ளார்.