இந்தியாவில் சிறுபான்மையினர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் இந்தியாவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், மேற்கத்திய ஊடகங்கள் கள ஆய்வுகளை மேற்கொள்ளாமல் செய்திகளை வெளியிடுகின்றன.
இந்தியாவில் எந்த வித இடையூறுகளும் இன்றி இஸ்லாமியர்கள் இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவித்தொகை உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அண்டை நாடான பாகிஸ்தானில் மத சிறுபான்மையினர் படுகொலை செய்யப்படும் நிலையில் இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது என்றார்.