Published on 05/10/2020 | Edited on 05/10/2020

மதுபோதையில் மாணவி ஒருவர் வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக்கொண்டு வெளிவரமுடியாமல் தவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த 21 வயதான பல்கலைக்கழக மாணவி ரோஸி கோல், தனது தோழிகளுடன் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளார். அளவுகடந்து மதுபானம் அருந்தியதால் நிதானத்தை இழந்த அவர் போதையில் தள்ளாடியுள்ளார். பின்னர் விளையாட்டாக வாஷிங்மெஷினில் புகுந்துள்ளார். இரண்டு கால்களையும் வாஷிங் மெஷின் ட்ரம்முக்குள் விட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால்கள் அதன் உள்ளேயே சிக்கியுள்ளன. எவ்வளவு முயன்றும் அவரது கால்களை வெளியே எடுக்கமுடியாத சூழலில், இருபது நிமிடங்களாக வாஷிங்மெஷினில் சிக்கியவாறே இருந்துள்ளார். அதன்பின் அங்குவந்த தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
— TheTabTikToks (@TikTab) October 2, 2020