Skip to main content

"பீஸ்" தொலைக்காட்சிக்கு தடை விதித்த இலங்கை கேபிள் நிறுவனங்கள்!

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

இந்திய இஸ்லாமிய மதகுரு ஜாகீர் நாயக் அவர்களின் மேல் பல்வேறு தீவிரவாத வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் தீவிரவாத தாக்குதல் ஜாகீர் நாயருக்கு தொடர்பு இருப்பதாகவும் , மேலும் பண மோசடி தொடர்பாக  இந்தியாவில் பல்வேறு வழக்குகளும் வங்கதேசம் மற்றும் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்குகளும் உள்ளனர். இந்நிலையில் இவரின் தொலைக்காட்சியான "பீஸ் தொலைக்காட்சிக்கு" இந்தியா மற்றும் வங்கதேச நாடுகள் ஏற்கெனவே தடை விதித்துள்ளனர். 

 

peace channel



இதனைத் தொடர்ந்து இலங்கையில் கேபிள் சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களான "Dialog & SLD" நிறுவனங்கள் "இஸ்லாமிய மதகுரு ஜாகீர் நாயக்கின்" சொந்த தொலைக்காட்சி நிறுவனமான "பீஸ்" தொலைக்காட்சியை தாங்கள் வழங்கும் கேபிள் சேவையில் இருந்து நீக்கியது. இதற்கு காரணம் என்னவென்றால் இலங்கையில்  ( ஏப்ரல் 21 ) ஈஸ்டர் பண்டிகை அன்று நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இது தொடர்பாக உலக நாடுகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக இலங்கை கேபிள் நிறுவனங்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர்.  இருப்பினும் இலங்கை அரசு பீஸ் தொலைக்காட்சிக்கு தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்