2018-ம் ஆண்டில் மக்கள் உருவாக்கிய மிக மோசமான கடவுச்சொற்களின் (பாஸ்வேர்டுகள்) பட்டியலை ஸ்பிளாஷ் டேட்டா எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், 2018-ம் ஆண்டில் ‘123456’ எனும் கடவுச்சொல்லே அதிகாமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் அதற்கு அடுத்தபடியாக 123456789 மற்றும் 12345678 ஆகியவை கடவுச்சொற்களாக பயன்படுத்தப்பட்டுள்ளது என ஸ்பிளாஷ் டேட்டா நடத்திய ஆயிவின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சன்ஷைன் (sunshine), ஐ லவ் யூ (i love you) மற்றும் டொனால்ட் போன்ற வார்த்தைகளும் அதிகாமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டொனால்ட் எனும் சொல் அந்தப் பட்டியலில் 23-வது இடத்தைப் பிடித்துள்ளது. பலரும் அவர்கள் எளிதில் நினைவு வைத்துக்கொள்ளும் பெயர்களையே வைக்கிறார்கள். எனவே இதனை மற்றவர்களால் எளிதாக ஹேக் செய்துவிடமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.