Skip to main content

அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

Sri Lankan confirms President Gotabaya Rajapaksa resign

 

இலங்கையில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மக்களின் சீற்றத்திற்கு பயந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகைவிட்டு வெளியேறிவிட்டார். அதிபர் பதவியை வரும் ஜூலை 13- ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்வதாக கோத்தபய தன்னிடம் தெரிவித்ததாக, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.  

 

இதற்கிடையே, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போது, அங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம், கட்டுக்கட்டாக இருந்ததைக் கண்டுபிடித்ததாகவும் அது ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடெங்கும் மின்சாரம் இல்லாமல் தாங்கள் திண்டாடிக் கொண்டுள்ள நிலையில், அதிபர் மாளிகையில் ஏராளமான ஏர் கண்டிஷனர் இயந்திரங்கள், இயங்கியவாறு இருந்ததாகப் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். 

 

இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகுகிறேன்  என பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதனை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்