Skip to main content

தீவிர பனிப்புயல்; 130 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

japan snowstorm

 

ஜப்பான் நாட்டில் தற்போது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. வழக்கத்தைவிட அதிக பனிப்பொழிவால் ஜப்பான் நாட்டின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் ஜப்பானில் நேற்று (19.01.2021) தீவிர பனிப்புயல் வீசியது. இந்த தீவிர பனிப்புயலால் மியாகி மாகாணத்தில் உள்ள தோஹோகு விரைவு நெடுஞ்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், அந்த பகுதி முழுவதுமே வெண்நிற பிரதேசமாய் காட்சியளிக்கத் தொடங்கியது.

 

இந்தப் பனிப்புயலால், தோஹோகு விரைவு நெடுஞ்சாலையில் சென்ற 130க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் வாகனங்களில் 200 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்றாலும், பனிப்புயலின் காரணமாக விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்த முடியவில்லை. அந்த வாகனங்களையும் பனி மூடியுள்ளது.

 

வானிலை மோசமாக இருப்பதால் பாதுகாப்புடன் இருக்கும்படி ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்