சவுதி அரேபியாவில் ஐரோப்பிய தூதர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குண்டுவெடித்து பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சவுதியின் ஜெட்டா நகரில் அமைந்துள்ள முதலாம் உலகப்போர் நினைவிடத்தில் நேற்று நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சவுதியைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் சவுதி அதிகாரிகள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சூழலில், இதுகுறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது சவுதி. மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.