Skip to main content

வீணாக்கப்பட்ட உணவிலிருந்து மீத்தேன் மற்றும் மின்சாரம் எடுக்கும் திட்டம்...

Published on 01/12/2018 | Edited on 01/12/2018

 

jap

 

வீணாக்கப்பட்ட உணவு பொருட்கள் மூலம் மீத்தேன் மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது. நாள்தோறும் 80 டன் உணவு பொருட்கள் சேமிக்கப்பட்டு, அதிலிருந்து மீத்தேன் வாயு தயாரிக்கப்படுகிறது. இதற்காக ஜப்பான் ரயில்வே துறையுடன் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், உணவு பதனிடும் தொழிற்சாலைகளில் வீணாக்கப்படும் உணவுகள் பெறப்பட்டு அவற்றை ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தி மீத்தேன் வாயு தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த மீத்தேன் வாயுவை கொண்டு மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. இதனை பற்றி அந்த தனியார் நிறுவன அதிகாரி கூறுகையில் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் மீத்தேனும், மின்சாரமும் எடுக்கவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்