கடந்தவாரம் சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் ஆலையில் ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆள் இல்லா விமானத் தாக்குதலில் அந்த ஆலை சேதமடைந்தது. இதனையடுத்து அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று காலை சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 10.2 சதவீதம் அதிகரித்தது. கடந்த சனிக்கிழமை இந்த ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட தீயை இன்னும் முழுமையாக அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதன்காரணமாக அந்த ஆலையின் 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. தினமும் 1 கோடி பீப்பாய்கள் உற்பத்தி செய்யப்படும் அந்த ஆலையில், தற்போது வெறும் 50 லட்சம் பீப்பாய்களே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் சந்தையில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் இன்று காலை அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.