
ஈரான் நாட்டில் அரசு எதிராக மக்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடத்திவருகின்றனர். அந்த நாட்டின் பத்து முக்கிய நகரங்களில் இப்போராட்டங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இப்போராட்டங்கள் நேற்று தீவிரமடைந்துள்ளது. ஈரானில் பொரளாதாரநிலை மிகவும் மோசமாகவுள்ளதால், இந்த அரசை கண்டித்து போராட்டங்கள் நடக்கிறது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகே உள்ள கராஜ் நகரில் கடந்த வியாழக்கிழமை அன்று போராட்டம் நடைபெற்றது. தற்போது டெஹ்ரான் தவிர அஹ்வாஸ், ஹமேதான், இஷாபான், கராஜ், கெர்மான்ஷா, மஷாத், ஷிராஸ், உர்மியா, வராமின் ஆகிய நகரங்களில் இப்போராட்டம் பரவியுள்ளது.
அரசை கண்டித்து பேரணிகளாக வரும் வாகனங்களின் மீது மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவம் அந்த பகுதிகளுக்கு வந்து கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தடுக்கின்றன. இதையடுத்து 10 நகரங்களி லும் போலீஸாரும், இராணுவத் தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.