Skip to main content

செவ்வாய் கிரகத்தில் 16 அடி ஆழத்திற்கு துளையிடப்போகும் இன்சைட்...!

Published on 27/11/2018 | Edited on 27/11/2018

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த மே மாதம் 5-ம் தேதி இன்சைட் எனும் விண்கலத்தை விண்ணில் ஏவியது. கிட்டத்தட்ட 7 மாதங்கள் கழித்து நேற்று (26-ஆம் தேதி) இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. 

 

ii

 

 

இதற்கு முன் பல விண்கலங்கள் செவ்வாய் கிரகத்திற்கு சென்றியிருந்தாலும் இன்சைட் தனித்துவம் வாய்ந்தது. காரணம் இன்சைட் விண்கலத்திற்கு முன் செவ்வாய் கிரகத்திற்கு சென்ற விண்கலம் எல்லாம் அதன் மேற்பரப்பில் மட்டுமே ஆய்வு செய்திருக்கின்றன. இறுதியாக நாசாவில் இருந்து ஏவப்பட்ட கியூரியாசிட்டி விண்கலம் மட்டுமே செவ்வாயின் நிலப்பரப்பில் ஒரு இன்ச் அளவிற்கு துளையிட்டு ஆய்வு செய்தது. ஆனால், இன்சைட் விண்கலம் இதுவரை எந்த விண்கலமும் செய்யாத அளவில் செவ்வாயின் மேற்பரப்பில் 16 அடி ஆழம் வரை துளையிட்டு செவ்வாய் கிரகத்தின் அடியில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய உள்ளது. 

 

 

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தினுள் நுழையும்போது, செவ்வாயின் வளிமண்டலத்தில் ஏற்படும் உராய்வு கரணமாக விண்கலம் தீ பிடிக்கும். அதனை சமாளிக்கும் வகையில் இன்சைட் விண்கலத்தின் மேல் ஒரு ஷீல்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது இன்சைட் விண்கலத்தை செவ்வாய் வளிமண்டலத்தில் ஏற்படும் தீயில் இருந்து காப்பாற்றும். இந்த செயல்பாடுகள் முடிந்து செவ்வாய் கிரகத்தில் இன்சைட் தரை இறங்க ஏழு நிமிடங்கள் ஆகியிருக்கிறது. இந்த ஏழு நிமிடமும் அடுத்தது என்ன நடக்கும், பாதுகாப்பாக இன்சைட் தரை இறங்குமா என ஒவ்வொரு நிமிடமும் விஞ்ஞானிகள் பதட்டத்துடன் இருந்தனர். ஆனால் இருதியாக இன்சைட் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி முதல் புகைபடத்தையும் நாசாவிற்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்