மனிதர்கள் மூலம் பரவும் கரோனா ஆட்கொல்லி வைரஸானது உலகம் முழுவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திவரும் சூழலில் நைஜீரியா நாட்டில் லாஸா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
மார்பர்க் மற்றும் எபோலா ஆகிய இரு குடும்பங்களை சேர்ந்த அதிகளவு தீங்கு விளைவிக்க கூடிய வைரஸாக இது பார்க்கப்படுகிறது. எலிகளில் இருந்து மனிதனுக்கு பரவும் இந்த வைரஸ், பின்னர் மனிதனில் இருந்து மனிதனுக்கும் பரவும் வாய்ப்பும் உள்ளது. இதனால் நைஜீரியா நாட்டில் இந்த காய்ச்சல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
அந்நாடு முழுவதும் சுமார் 11 மாகாணங்களில் இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே கரோனா வைரஸ் ஒருபுறம் மனித உயிர்களை பறித்து வரும் சூழலில், தற்போது லாஸா காய்ச்சலும் பரவ ஆரம்பித்திருப்பது உலகம் முழுதும் உள்ள மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.