அமெரிக்காவுடன் வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை என்று கிம்மின் சகோதரியான கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி சோதனை பேச்சு வார்த்தைத் தொடர்பாக வடகொரியாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பம்பியோ அண்மையில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வடகொரிய ஊடகம் ஒன்றிற்குக் கருத்துத் தெரிவித்துள்ள கிம் யோ ஜாங், "அமெரிக்காவுடன் மீண்டும் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தற்போதைக்குத் தேவை இல்லை. நாங்கள் அணுசக்தி மயமாக்கத்தைக் கைவிடமாட்டோம் எனக் கூறவில்லை. ஆனால் இப்போதைக்கு அதனைக் கைவிட முடியாது. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அது ஒரு தரப்பின் பெருமைக்காக மட்டுமே இருக்கும். தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தைக்கான தேவைஇல்லை. ஆனால் இருநாட்டுத் தலைவர்கள் இடையே ஒரு முடிவு எட்டப்பட்டால் ஆச்சரியமான சில விஷயம் நடைபெற வாய்ப்புள்ளது. அமெரிக்கா நம்மைச் சீண்டிக் காயப்படுத்தாதவரை, எல்லாமே சுமூகமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.