Skip to main content

கண்கலங்கிய கிம் ஜாங் உன்... கண்ணீர்விட்ட மக்கள்..

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

kim jong un cries at stage

 

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழாவில் கிம் ஜாங் உன் கண்கலங்கியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

 

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை ராணுவ அணி வகுப்பு  நடைபெற்றது. இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியாவின் சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணையான ஹவாசோங் -16 அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் மக்கள் மத்தியில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், "நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும், கடல் போன்று ஆழமாகவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், நான் என் பணியை சரிவரச் செய்யத் தவறிவிட்டேன். நான் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, இதற்காக மிகவும் வருந்துகிறேன்.

 

இந்த நாட்டை வழிநடத்திய என் தந்தை மற்றும் தாத்தாவை தொடர்ந்து இந்த நாட்டை வழி நடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி, என் முயற்சிகள் எப்போதும் நேர்மையாகவே இருக்கும், தங்கள் வாழ்க்கையில் உள்ள சிரமங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" எனப் பேசிக்கொண்டிருக்கும்போது, கண்கலங்கினார். அப்போது அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் மற்றும் மக்கள் பலரும் கண்ணீர் விட்டனர். ஆனால், கிம் மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக இப்படி பேசியுள்ளார் எனச் சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்