உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டிருக்கும் வாட்ஸ்அப் செயலி வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் ஒருசில குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் செயலியில் பல புதிய அம்சங்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடாக ஒருசில பழைய மாடல் போன்களில் இந்த செயலி இனி வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, பிப்ரவரி 1, 2020 முதல் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.3.7 மற்றும் அதற்கு முன்னதான ஓ.எஸ். வெர்ஷன்கள் கொண்ட மொபைல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது. அதேபோல ஐபோனை பொறுத்தவரை, ஐஓஎஸ் 8 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்களை கொண்ட போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்டோஸ் போன்கள், ப்ளாக்பெர்ரியின் சில போன்கள், நோக்கியா சிம்பியன் மற்றும் எஸ்.40 போன்களிலும் வாட்ஸ்அப் செயலியின் செயல்பாடு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.