Skip to main content

இடைக்கால அமைச்சரவையை அமைத்த கோத்தபய ராஜபக்சே... முக்கிய பதவிகளில் சகோதரர்கள்...

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. அதில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த திங்கள்கிழமை அந்நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார். அவரது சகோதரரான மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார்.

 

interim cabinet of srilanka

 

 

இந்நிலையில், கோத்தபய ராஜபக்ச இலங்கைக்கான இடைக்கால அமைச்சரவையை நியமித்துள்ளார். இதில் அவரின் சகோதரர்களுக்கு முக்கியப் பொறுப்புகளில் இடம் தரப்பட்டுள்ளதாக பிடிஐ நிறுவன செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் 16 பேர் அடங்கிய இடைக்கால அமைச்சரவை இன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் மகிந்த ராஜபக்சேவுக்கு நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகமும், கோத்தபய ராஜபக்சேவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சேவுக்கு உணவு பாதுகாப்புத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அமைச்சர்கள் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்கள் என்று கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்