Published on 28/07/2018 | Edited on 28/07/2018

தான் தவறு செய்யமாட்டேனா என அமெரிக்க ஊடங்கள் தன்னை கூர்ந்து உற்றுநோக்கி வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஊடங்கள் மீது பாய்ச்சல் கருத்தை தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஊடகங்கள் அனைத்தும் தன்னை கண் இமைக்காமல் உற்றுநோக்கி வருகிறது. எங்கே நான் தவறு செய்யமாட்டேனா என எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இது போன்ற நிலை இதற்கு முன் அதிபர்களாக இருந்த பராக் ஒபாமாவிற்கும், புஷ்க்கும் கூட இருந்ததில்லை என குறிப்பிட்ட டிரம்ப். தன்னை கண்கொத்தி பாம்பாக கண்காணிக்ககும் ஊடங்களுக்கு முன் ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்துவைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.