பிரான்ஸ் நாட்டிலுள்ள புய் டு பொவ் (puy du fou) என்னும் தீம் பார்க்கில், சிகரெட் குப்பைகளையும் சில சிறிய அளவினான குப்பைகளையும் சுத்த்ப்படுத்த 6 காக்கைகளை பணிஅமர்த்தி, பார்க்கிற்கு வரும் பார்வையளர்களை ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளனர். இந்த சுத்த்ப்படுத்தும் வேலைக்காக சிறப்பு பயிற்ச்சி இக்காக்கைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சுத்தம் செய்தால், இந்த காக்கைகளுக்கு பரிசாக சிறப்பு உணவுகள் வழங்கப்படுமாம். பயிற்சியளிக்கப்பட்ட காக்கைகளில் ஒரு காக்கை மட்டுமே இதுவரை இவ்வேலைகளை செய்துவந்தது. இன்றுமுதல் மீதம் இருக்கும் ஐந்து காக்கைகளும் பணியை மேற்கொள்ளும் என்று தீம் பார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பூங்கா நிறுவனர் நிக்கோலஸ் தெரிவித்ததாவது: பறவைகளை கொடுமை செய்வது தங்கள நோக்கமில்லை, இதைப்பார்த்தாவது மக்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாதா என்பதுதான். தற்போது, பூங்காவிற்கு வருகைத்தரும் மக்கள் பறவைகள் சுத்தம் செய்வதை பார்த்து பூங்காவை துய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். காக்கைகள் அறிவித்தரம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.