Published on 24/10/2024 | Edited on 24/10/2024
கியூபா நாட்டில் நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட மின்வெட்டால் நான்கு நாட்கள் நாட்டு மக்கள் இருளில் தவித்துள்ளது நிகழ்ந்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக கியூபா நாட்டின் மின் நிலையங்கள் செய்யப்பட தேவையான டீசலை இறக்குமதி செய்யாத நிலை நிலவியது. இதனால் கியூபாவில் நாடு தழுவிய அளவில் மின் வெட்டு ஏற்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்களாக மின்வெட்டு ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையே ஆஸ்கர் எனும் சூறாவளிக்கு மத்தியிலும் சிக்கியும் அந்நாட்டினர் அவதிப்பட்டுள்ளனர். தற்பொழுது கியூபா நாட்டின் ஒவ்வொரு பகுதியாக மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு வருகிறது.