Published on 25/02/2022 | Edited on 25/02/2022
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்தோனேஷியாவிவின் சுமத்ரா தீவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. சுனாமி தொடர்பான எந்த அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை. கடந்த 2004 ஆண்டு இதே சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி அலைகள் உருவாகி பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.