உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,065 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நேற்று (26/03/2020) உலகம் முழுவதும் எண்ணிக்கை 22 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று 24 ஆயிரமாக கரோனா பலி அதிகரித்துள்ளது.
கரோனா உயிரிழப்பில் இத்தாலி முதலிடம், இரண்டாவதாக ஸ்பெயின், மூன்றாவதாக சீனா, நான்காவதாக அமெரிக்கா உள்ளது. மேலும் இத்தாலியில் 8,215, ஸ்பெயினில் 4,365, சீனாவில் 3,287, அமெரிக்காவில் 1,293 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
உலகளவில் 170- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா பரவிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5,31,609 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,23,391 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா பரவ தொடங்கிய சீனாவை பின்னுக்கு தள்ளி நோய் பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்காவில் 85,268, சீனாவில் 81,285, இத்தாலியில் 80,589, ஸ்பெயினில் 57,786 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் புதிதாக அமெரிக்கா 17,057, ஸ்பெயின் 8,271, இத்தாலி 6,203, ஜெர்மனியில் 6,615 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.