கரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு 550க்கும் அதிகமானோர் ஆளாகியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸூக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த வைரஸூக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அதிவேகமாகச் செயல்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் இதற்கு முறையான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. 71 வயதான சார்லஸுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ஸ்காட்லாந்தில் உள்ள அவரது இல்லத்தில் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.