Published on 08/05/2021 | Edited on 09/05/2021
![jkl](http://image.nakkheeran.in/cdn/farfuture/iWeyMVD34XlZQ_3702jl9GB6hNtaeH2fp6H6negVyPI/1620526813/sites/default/files/inline-images/QRG_187.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 15 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 32 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் 15.83 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 13.57 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32.96 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு மிக அதிகமாக இருந்து பின்னர் படிப்படியாக குறைந்துவந்த நிலையில், தற்போது இரண்டாம் அலையில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2.22 கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.