Published on 17/12/2021 | Edited on 17/12/2021

பூட்டான் நாடு, தங்கள் நாட்டின் மிகவும் உயரிய சிவிலியன் விருதான ’நகடக் பெல் ஜி கொர்லோ’ விருதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவித்துள்ளது. பூட்டான் நாட்டின் அரசர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளாதாக பூட்டான் நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விருதினை அறிவிக்கையில், பல ஆண்டுகளாக, அதிலும் குறிப்பாக கரோனா பரவலின்போது, பிரதமர் மோடி அளித்த அளவற்ற நட்பையும், ஆதரவையும் பூட்டான் அரசர் சுட்டிக்காட்டியதாகவும் அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.