அமெரிக்காவில் ராணுவ வீரர் ஒருவர் சேகுவேராவின் உருவம் பொறித்த டி-ஷர்ட்டை அணிந்ததற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வேஸ்ட் பாய்ண்ட் என்ற ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுவந்த ஸ்பென்ஸர் ரபோன் என்ற 26 வயது இளைஞர் கியூப புரட்சியாளர் சே குவேராவின் உருவம் பொறித்த டி-சர்ட்டை அணிந்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் பல முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் ராணுவத்தால் விசாரிக்கப்பட்டு வந்தார்.
2016-ஆம் ஆண்டு தனது முதல் ராணுவ பயிற்சியின் போதே பயிற்சி முடிந்த பின் களத்திலேயே தனது ராணுவ பயிற்சி தொப்பியின் பின்புறம் ''கம்யூனிசம் வெல்லும்''( communism wil win) என்று எழுதியும், தனது பயிற்சி உடையினுள் உடுத்தியிருந்த சேகுவேராவின் உருவம் பொறித்த டி-ஷர்ட்டையும் போட்டோ எடுத்தும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
தற்போது இதுபோன்ற அவரின் செயல்களை கண்காணித்த ராணுவம் அவரை விசாரித்து பணியிலிருந்து நீக்கியுள்ளது. இதனால் அவர் மீண்டும் பணிக்கு செல்ல வாய்பில்லை என்றே ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனாலும் தன் பணி பறிபோனதை பற்றி துளியும் கவலையில்லாமல் இருக்கிறார் ஸ்பென்ஸர்.