
சீனாவில் ஏர் சைனா விமானத்தில் சிகரெட் பிடித்து அவசரநிலையை ஏற்படுத்திய துணை விமானியை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை அன்று ஹாங்காங்கில் இருந்து டாலியன் பகுதிக்கு சென்ற விமானத்தில் திடீரென பயணிகளுக்கு சுவாசிக்க காற்று இன்றி அவஸ்தைப்பட்டனர். இதனால் பயணிகளுக்கு
ஆக்சிஜன் மாஸ்க் கொடுக்கப்பட்டது. மிக அதிக உயரத்தில் விமானம் பறப்பதால்தான் இப்படி நடக்கிறது என்று விமானத்தை 10,000அடி கீழ் நோக்கி இயக்கியுள்ளனர்.
விசாரணையில், சிகரெட் புகைத்த துணை விமானி, அந்த புகை பயணிகள் இருக்கும் கேபினுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக வெண்டிலேட்டரின் இயக்கத்தை நிறுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், விமானத்தில் புகை பிடிக்கக்கூடாது என்ற விதியை மீறியதை அடுத்து, வெண்டிலேட்டரை நிறுத்தியதற்காகவும் சீனா உள்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் அவரது பணியை நீக்கியுள்ளது.