கரோனா கலக்கத்தில் சற்றே மறக்கப்பட்டிருந்த சாமியார் நித்தியானந்தா மீண்டும் தற்பொழுது புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அண்மையில், உருவாக்கப்பட்டிருக்கும் கைலாசா நாட்டிற்கு வங்கி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசாவுக்கான30 பக்கங்களைக் கொண்ட வங்கி விதிமுறைகள் தயாராக உள்ளன. கரன்சிக்கானவடிவமைப்பு முதல் அனைத்தும் தயாராக உள்ளது. உள்நாட்டிற்குஒரு கரன்சியும், வெளிநாட்டிற்கு ஒரு கரன்சியும்சட்ட விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்த உள்ளோம். ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசாவைவாடிகன் வங்கியை போன்று கட்ட அமைத்துள்ளோம்''எனக் கூறியுள்ளார்.